புர்காவைக் களைய மறுத்த பெண் மருத்துவத் தொழிலைத் துறந்தார்!
ஹோமாகம தேசிய வைத்தியசாலையில் பணிபுரியும் இளம் பெண் முஸ்லிம் வைத்தியர் ஒருவர், புர்காவைக் கழற்ற மறுத்து வைத்தியத் தொழிலில் இருந்து விலகுகின்றார் எனக் கடிதம் அனுப்பியுள்ளார்.
கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியரான இவர், ஹோமாகம வைத்தியசாலையில் இணைப்பு கடமையாற்றி வருகின்றார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து, முகத்தை மூடும் புர்காவுக்கு அரசு தடை விதித்திருந்தது. புர்காவுடன் கடமையிலிருந்த இவரைப் பார்த்து அச்சமடைந்த நோயாளியொருவர், இவரிடம் சிகிச்சை பெற மறுத்திருந்தார்.
இதையடுத்து, புர்காவை கழற்றும்படி வைத்தியசாலைப் பணிப்பாளர் உத்தரவிட்டிருந்தார்.
வைத்தியசாலையிலிருந்து வெளியேறியிருந்த வைத்தியர், சில நாட்கள் பணிக்கு வருகை தரவில்லை.
அதன்பின்னர் தான் பணியியை இராஜிநாமா செய்துகொள்கின்றார் என வைத்தியசாலைக்கு இராஜிநாமாக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
எனினும், அந்தக் கடிதத்தை நாம் இன்னமும் பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை என்று குறித்த வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரியான ஜே.ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
0 comments :
Post a Comment