ஹிஸ்புல்லாவை விரட்டக்கோரி திருமலையை முடக்கிய மக்கள்.
கிழக்கு மாகாண ஆழுனர் ஹிஸ்புல்லாவை அப்பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று திருமலை மாவட்டம் முடக்கப்பட்டது.
கடைகளை அடைத்து தமது எதிர்ப்பினை தெரிவித்த மக்கள் பொதுச்சேவைகளையும் பகிஷ்கரித்தனர்.
அத்துடன் தெருக்களில் டயர்களை போட்டு எரித்த அவர்கள் சேவையில் ஈடுபட்ட இலங்கை போக்குவரத்து சேவையின் பேருந்துகள் மீது கல்களை வீசி தாக்குதல் நடாத்தினர்.
அரச அலுவலகங்கள் திறந்திருந்தபோதும், மக்கள் சேவைநாடிச் செல்லாமையால் அவை உறங்கு நிலையிலேயே காணப்பட்டன.
பாடசாலைகளில் வரவு மிக சொற்ப அளவில் பதிவானது.
இதேவேளை, ஹிஸ்புல்லாவை கிழக்கு ஆளுநர் பதவியிலிருந்து நீக்கக் கோரி சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள மஹிந்த அணியின் கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் விஜய விக்கிரம லமஹேவாவின் போராட்டம் தொடர்கின்றது.
புனானையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அரபு பல்கலைக்கழகம் என அறியப்படும் பல்கலைக் கழகம் தொடர்பான பெரும் சிக்கலில் ஹிஸ்புல்லா சிக்கியுள்ளார். அவர் அந்த விடயத்தில் பாரிய மோசடியை செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவரது மகனுக்கு குறித்த பல்கலைக் கழகத்தில் 500 மில்லியன் ரூபாய்கள் முதலீடு உள்ளதாக ஆவனங்கள் உறுதிப் படுத்தியுள்ள நிலையிலேயே ஹிஸ்புல்லாவை அகற்றுவீர் என மைத்திரிபாலவிற்கு மக்கள் அழுத்தம் கொடுக்கின்றனர்.
0 comments :
Post a Comment