தாக்குதல்கள் தொடர்பில் முஜிபுர் ரஹ்மான் பொறுப்புக்கூற வேண்டும்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட அரசாங்கத்தின் சில பாராளுமன்ற உறுப்பினர்களே பொறுப்புக்கூற வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விஷேட அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் 4 குடும்பங்களை சேர்ந்த 32 பேர் ISIS அமைப்பில் பயிற்சி பெற்று இந்நாட்டிற்கு தாக்குதல் தயாராக இருப்பதாக கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் திகதி தான் தெரிவித்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு தெரிவித்த பின்னர் அரசாங்கத்தில் உள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடக சந்திப்பொன்றை வைத்து அவை பொய்யான கருத்துக்கள் என தெரிவித்திருந்தனர்.
அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தனக்கு சாபமிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment