இஸ்ரேலை இலங்கை உட்பட உலக நாடுகள் பயங்கரவாத நாடு என அறிவிக்க வேண்டுமாம். கோருகின்றது உலாமா சபை
இஸ்ரவேலை பயங்கரவாத நாடாக பிரகடனப்படுத்திய பொலிவியா நாட்டை இலங்கை முஸ்லிம் உலமா கட்சி பாராட்டுவதுடன் அந்நாட்டை பின்பற்றி இலங்கை உட்பட உலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேலை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மதனி இன்று (07) தெரிவித்ததாவது,
இஸ்ரேல் உருவான காலம் முதல் அது தனக்கு விருந்தாளியாக இருக்க இடமளித்த பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்திருப்பதுடன் மனித உரிமைகளை கொஞ்சமும் மதிக்காமல் தினமும் மிக மோசமான பயங்கரவாதத்தை அரங்கேற்றி வருகின்றது.
குழந்தைகள், பெண்களையும் காட்டுமிராண்டித்தனமாக தாக்கி வருகிறது. உலகில் பயங்கரவாதத்தை எதிர்ப்போம் என கோஷமெழுப்பும் அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளும் இஸ்ரேலின் பயங்கரவாத நடவடிக்கைகளும் கண்டும் காணாமல் இருக்கின்றன.
இவ்வாறு இந்த நாடுகள் இஸ்ரேல் விடயத்தில் கண் மூடிக்கொண்டிருப்பதால் இஸ்ரேலின் பயங்கரவாத செயல்கள் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கின்றன.
இந்த நிலையில் பொலிவியா நாடு இஸ்ரேலை பயங்கரவாத நாடாக பிரகடனப்படுத்தியுள்ளமை நல்லதொரு முன்னுதாரணமாகும். இதனை உதாரணமாக வைத்து அனைத்து நாடுகளும், இலங்கையில் உள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் கட்சிகளும் பொலிவியாவை பாராட்டுவதுடன் இஸ்ரேல் பயங்கரவாத நாடுதான் என பிரகடனப்படுத்த வேண்டும் என உலமா கட்சி கோரிக்கை விடுக்கிறது.
0 comments :
Post a Comment