அரசியலுக்கு வந்ததால் சுமந்திரனுக்கு நஷ்டமாம். அவ்வாறாயின் வரிச்சலுகை வாகனங்கள் எங்கே?
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தான் அரசியலுக்கு வந்ததால் தனது வருமானம் குறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொழும்பில் சட்டத்தரணியாக தொழிலாற்றிய அவர் அரசியலுக்கு நுழைந்தால் தொழில் ரீதியில் சற்று பின்னடைவுகள ஏற்பட்டிருக்கலாம் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது. ஆனாலும் அதனால் அவரது வருமானம் குறைவடைந்துள்ளது எனபது எவ்வளவு தூரம் நியாமானது என்பது இங்கு கேட்கப்படவேண்டிய கேள்வியாகவுள்ளது.
தேசியப்பட்டியல் ஊடாக ஒரு முறையும் மக்கள் தெரிவினூடாக ஒரு முறையும் பாராளுமன்றுக்கு தெரிவான சுமந்திரன் இரு தீர்வை அற்ற வாகனங்களை பெற்றுள்ளார். இருமுறையும் அவர் பெற்றுக்கொண்ட தீர்வை விலக்கானது அறுநூற்றி அறுபது லட்சங்கள் (66 000 000 ரூபாய்கள்) ஆகும்.
120 மாதங்களுக்காக ஆறுகோடியே அறுபது லட்சங்களை மொத்தமாக பெற்றுக்கொண்டுள்ள சுமந்திரன் எவ்வாறு தனது வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டது என்று கூறமுடியும்? அதாவது மாதம் ஒன்றுக்கு வரிவிலக்கினால் மாத்திரம் ஐந்து லட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாய்கள் வருமானமாக ஈட்டிவரும் நிலையிலேயே சுமந்திரன் வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேற்படி வருமானத்திற்கு மேலதிகமாக வாகனத்திற்கான எரிபொருள் மற்றும் சாரதிகளுக்கான ஊதியம், பாராளுமன்ற அமர்வுகளுக்கான விசேட கொடுப்பனவு, காரியாலய நிர்வாகச் செலவு, அதன் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் என ஏகப்பட்ட வருமானத்தை பெற்றுக்கொள்ளும் ஒரு நபரால் தனது வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று கூறுவது எந்த வகையில் ஏற்புடையதாகும் என்ற கேள்வியை இலங்கைநெட் எழுப்புகின்றது.
0 comments :
Post a Comment