Thursday, March 21, 2019

ஒரு ஆவணத்தை தயாரிக்கக்கூட, இந்த அரசாங்கத்திற்கு திறன் இல்லை - ஜே.வி.பி

மத்திய வங்கியில் இடம்பெற்ற முறி மோசடிகளுடன் தொடர்புபட்ட அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான முன்னெடுப்புக்கள் மந்த கதியில் இடம்பெற்று வருவதாக பல விமர்சனங்கள் வெளிவருகின்றன.

இந்த நிலையில் அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு அனுப்பி வைக்க சிங்கபூர் பிரதமர் ஒத்துழைப்பு வழங்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். எனினும் இலங்கை, தமது நாட்டு சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக எந்தவித ஆவணங்களையும் இதுவரை முன்வைக்கவில்லை என, சிங்கப்பூர் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

எனவே ஒரு ஆவணத்தை தயாரிப்பதற்கு கூட, இலங்கை அரசாங்கத்திற்கு திறன் இல்லையா? என, மக்கள் விடுதலை முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது. அந்த முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜெயதிஸ்ஸ இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றைய தினம் கூடிய பாராளுமன்ற அமர்வில் ஆரம்பக் கைத்தொழில், சமூக வலுவூட்டல் அமைச்சு, பொது வழங்கல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு பற்றிய அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சு, விசேட பிரதேசங்கள் அபிவிருத்தி பற்றிய அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பான குழுநிலை விவாதம் இடம்பெற்றது.

இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போதே, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜெயதிஸ்ஸ இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment