யாழில் வாள்வெட்டு தாக்குதல் - ஒருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் - வேம்படி வீதியில் இன்று நண்பகல் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலால் படுகாயமடைந்த நபர் ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கோவில் வீதியைச் சேர்ந்த குணசிங்கம் ரஜீவ்குமார் என்பவரே இச்சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். வாடகை மகிழுந்து சேவையில் .ஈடுபடும் வாகனத்தை மறித்து, சந்தேகத்திற்கு இடமான கும்பல் ஒன்று வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
இதன்போது குறித்த வாள்வெட்டுக் கும்பல், மகிழுந்தில் பொருத்தப்பட்டிருந்த கமராவையும் அபகரித்துக் கொண்டு தப்பிச்ச சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை மேற்கொண்ட கும்பல், 5 மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்து, மகிழுந்தின் சாரதியை வெட்டிக் காயப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளது. இந்த தாக்குதல், தனிப்பட்ட முரண்பாடு காரணமாகவே இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment