வரி ஏய்ப்பில் ஈடுபட்ட அர்ஜுன் அலோசியஸுக்கு சொந்தமான நிறுவனம்
பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜுன் அலோசியஸ், பிணை முறி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இவர் குறித்த விசாரணைகள், தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அர்ஜுன் அலோசியஸுக்கு சொந்தமான நிறுவனம் ஒன்றில் வரிஏய்ப்பு இடம்பெற்றுள்ளதாக, ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் ஜெயதிஸ்ஸ இன்றைய பாராளுமன்ற அமர்வில் வைத்து இதனை குறிப்பிட்டார். மேற்படி நிறுவனம் இலங்கை மதுவரி திணைக்களத்திற்கு சுமார் 506 லட்சம் ரூபாவை வழங்க வேண்டியிருந்தும், அந்த பணம் உரிய முறையில் செலுத்தப்படவில்லை.
அத்துடன் அதே நிறுவனம் களுத்துறையில் உள்ள 72 ஆயிரம் தென்னை மரங்களுடனான பாரிய காணிப்பரப்பை கொள்வனவு செய்ய கோரிக்கை முன்வைத்துள்ளது. அந்த இடத்தில் கள் உற்பத்தியை மேற்கொள்வதற்காகவே சின்ஹா கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை அறிந்து கொண்ட பல அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், இலங்கை மதுவரி திணைக்களத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றதாக, நளின் ஜெயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment