ஜெனீவா திருவிழாவிற்கு செல்வோருக்கு ஆப்பு! வீசா மறுப்பு
ஐக்கிய நாடுகளை சபையின் மனித உரிமைகள் மன்றின் அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக இலங்கையிலிருந்து செல்வதற்காக வீசாவிற்கு விண்ணப்பித்திருந்த பலருக்கு வீசா மறுக்கப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கின்றது.
மனித உரிமைகள் ஆணையகத்தின் அமர்வுகள் இடம்பெறுகின்றபோது இலங்கையிலிருந்து செல்லும் கூத்தாடிகள் அங்கு பக்கவறைகளில் இடம்பெறுகின்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு, ஊடகங்களுக்கு தாம் பெரிதாக ஏதோ சாதித்து விட்டதாக அறிக்கை விட்டு மக்களை ஏமாற்றுவதையே கடமையாக கொண்டிருந்தனர்.
அதேநேரம் இவர்களை சுவிட்சர்லாந்துக்கு அழைத்துக்கொள்வதற்கென புலம்பெயர் நாடுகளிலுள்ள புலி வியாபாரிகள் மக்களிடம் பெரும் பணத்தினையும் வசூலிப்பர். அவ்வாறு கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற நிகழ்வுகளுக்காக மக்களிடம் பணம் வசூலிப்பதற்காக புலம்பெயர் அமைப்பொன்றினால் மக்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்த ஆவனம் ஒன்றிலிருந்து ஒரு பக்கத்தை இங்கு தருகின்றோம். இதிலிருந்து மேற்படி நிகழ்வுக்காக மக்களின் பணம் எவ்வளவு செலவிடப்படுகின்றது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
இவ்வளவு தொகையை சேகரித்து ஜெனிவாவில் திருவிழா கொண்டாடுவதிலும் பார்க்க இப்பணத்தினை கொண்டு பாதிக்கப்பட்ட மக்கள் தொழில்புரியக்கூடிய தொழிற்சாலை ஒன்றை அமைத்தால் அது எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்ற கேள்வியை இலங்கைநெட் எழுப்புகின்றது.
0 comments :
Post a Comment