Monday, March 25, 2019

பதவியிலிருந்து தூக்கி, அரசியல் பயணத்தை அழிப்பேன்! ஹிருணிகா பெண் நகர சபைக்கு அச்சுறுத்தல்.

அரசியல்வாதிகள் எதற்காக அரசியலுக்குள் நுழைகின்றார்கள் என்பதற்கும் அவர்கள் சுகபோகங்களுக்காக தங்களுக்குள்ளே எவ்வாறு அடிபட்டுக்கொள்ளுகின்றார்கள் என்பதற்கும் இங்கே தரவேற்றப்படுகின்ற தொலைபேசி உரையாடல் ஒரு சிறந்த உதாரணமாக அமையும்.

பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும் முக்கியஸ்தருமாவார். அவர் அக்கட்சின் சகவேட்பாளரான துமிந்த சில்வாவினால் சுட்டுக்கொல்லப்பட்டார். துமிந்த சில்வாவிற்கு கொலைக்காக மரண தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தந்தையின் மரணத்தை தொடர்ந்து மகள் ஹிருணிகா பிறேமச்சந்திர அரசியலுக்குள் நுழைந்தார். சுpறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். அவர் தனது மேடைகளில் அதிகமாக ஊழல் , மோசடிகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் பற்றி பேசுவார்.

இவ்வாறு அதிகார துஷ்பிரயோகம் பற்றி பேசும் அவர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கியதில் சிக்கினார்.

அவ்வாறான நிலையில் தற்போது கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் ஒருவரை மிரட்டும் தொலைபேசி உரையாடல் வெளியாகியுள்ளது.

குறித்த உரையாடலிலே தனது சுய கட்டுப்பாட்டினை இழந்து ஹிருணிகா குறித்த பெண் உறுப்பினர் மீது வசைபாடுகின்றார்.

உனது தராதரம் என்ன எனது தராதரம் என்ன என்பதை நினைவில் வைத்துக்கொள் எனக் கூறுகின்றார்.
அத்துடன் உனது அரசியல் வாழ்வினை ஒழிப்பேன் என மிரட்டுகின்றார்.

குறித்த கோழிச் சண்டையானது மக்களுக்கு சேவை செய்வதற்காக அல்ல மாறாக உல்லாசம் அனுபவிப்பதில் ஏற்பட்ட ஒரு சிக்கல் காரணமாகவே.

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கு தாய்லாந்துக்கு செல்வதற்கு வாய்ப்பு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. செல்வோர்கள் பட்டியலில் சம்பந்தப்பட்ட உறுப்பினரில் பெயரை ஹிருணிக்கா நீக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதனால் வேதனையடைந்த உறுப்பினர் ஹிருணிக்காவுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியபோது இருவரும் சண்டையிடும் பதிவு தற்போது அம்பலத்தில்.

இவ்வாறானவர்கள் இன்னும் தேவையா? என்பதனை சிங்களம் தெரிந்தோர் கேட்டுப்பார்க்கலாம்.



No comments:

Post a Comment