போதைப்பொருள் நடவடிக்கையை கண்டறிய விசேட மோப்ப நாய்கள்
நாட்டில் கடத்தப்படுகின்ற அல்லது விற்பனை செய்யப்படுகின்ற கொக்கெய்ன், ஹெரோயின் ஆகிய போதைப்பொருள்களை கண்டறிவதற்கு பொலிஸ் மோப்பநாய்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த விசேட நடவடிக்கைக்காக சுமார் 70 பொலிஸ் மோப்பநாய்ககள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் கூறுகின்றனர்.
இலங்கை பொலிஸாரின் கடமைகளுக்கு துணையாக பொலிஸ் மோப்பநாய்கள் பிரிவில் 222 நாய்கள் செயற்பட்டுவரும் நிலையில், போதைப்பொருள் கடத்தல்களை தடுப்பதற்காக 70 பொலிஸ் மோப்பநாய்ககள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இலங்கைப் பொலிஸ் படைக்கு 60 மோப்ப நாய்கள் வெளிநாடுகளிலிருந்து வருவிக்கப்பட்டு நாட்டில் விசேட பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, விமானம் மூலம் நாட்டிற்கு கொண்டுவரப்படும் போதை பொருட்களை தடுப்பதற்கு, கட்டுநாயக்க விமான நிலையத்தில்
பொலிஸ் மோப்பநாய் பிரிவு செயற்படுத்தப்படுகின்றது. அதேபோன்று கொழும்பு துறைமுகம் மூலம் இரகசியமாக நாட்டிற்குக் கொண்டுவரப்படும் போதைப்பொருளை கைப்பற்றுவதற்கு உதவும் வகையில், துறை முகத்திலும் பொலிஸ் மோப்பநாய் பிரிவு செயற்படுத்தப்படுகின்றது.
மேலும் எதிர்காலத்தில் காலி மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களிலும், மத்தள விமான நிலையத்திலும் பொலிஸ் மோப்பநாய் பிரிவொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment