அடுத்தவாரம் இலங்கையில் செயற்கை மழை
செயற்கை மழையை உருவாக்கும் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மின்வலு அமைச்சு கூறியுள்ளது. இலங்கையில் வறட்சியான காலநிலை நீடிப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. செயற்கை மழையை உருவாக்குவதற்கு தாய்லாந்து நாட்டின் ஒத்துழைப்பை பெற்றுள்ளதாக, இலங்கை மின்சார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன கூறினார்.
இந்த நிலையில் செயற்கை மழையை உருவாக்கும் வேலை திட்டம் எதிர்வரும் வாரம் ஆரம்பிக்கப்படும் என்று மின்வலு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.அண்மைய நாட்களில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர்மின் உற்பத்தி செய்வதில் பாரிய சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக மின்வலு அமைச்சு கூறியுள்ளது.
0 comments :
Post a Comment