பெலியத்த துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் காயம்
பெலியத்த பல்லத்தர – மோதரவான பகுதியிலுள்ள வீட்டின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பெலியத்த பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் கபில அமரகோன் காயமடைந்துள்ளார். பிரதேச சபையின் உறுப்பினரான கபில அமரகோன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே, குறித்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த பிரதேச சபை உறுப்பினர் சிகிச்சைக்காக தங்காலை வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்த துப்பாக்கி பிரயோகம் எதற்காக யாரால் மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
0 comments :
Post a Comment