இந்த மாத இறுதிக்குள் சாதாரணதர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படும் - பரீட்சைகள் திணைக்களம்
இந்த மாத இறுதிக்குள் கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீ்டசையின் பெறுபேறுகள் வௌியிடப்படும் என, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இம்முறை இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீ்டசையில் மொத்தமாக 6,56,641 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
இந்த பரீட்சை கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் திகதி முதல், 18 ஆம் திகதி வரை நடைபெற்றது. இப்பரீட்சை இலங்கை முழுவதுமாக 4 ,461 மத்திய நிலையங்களில் நடைபெற்றது.
இந்தநிலையில், நடந்து முடிந்த சாதாரண தர பரீட்சசை பெறுபேறுகள் அடங்கிய பட்டியலைத் தயாரிக்கும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த மாத இறுதிக்குள் அனைத்து கல்விப்பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment