கஞ்சிப்பானை கட்டுநாயக்கவில் சிஐடி யின் பானைக்குள்.
மொஹமட் நஜீம் இம்ரான் எனும் கஞ்சிப்பானை இம்ரான் இலங்கையில் பிரபல பாதாள உலக குழுக்களின் தலைவர்களில் ஒருவர். இவர் பல்வேறு கொலைக்குற்றங்களுகாக தேடப்பட்டு வந்த நிலையில், டுபாயில் தலைமறைவாகி இருந்தார்.
கடந்த பெப்ரவரி மாதம் 5 ம் திகதி டுபாய் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கை ஒன்றில் மாக்கந்துரை மதுஸ் என்பவருடன் கைது செய்யப்பட்டவர்களில் இவரும் ஒருவர்.
இந்நிலையில் டுபாய் பொலிஸாரால் நாடுகடத்ததப்பட்ட கஞ்சிப்பானை இம்ரான் இன்றுகாலை ( ) என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கியபோது சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாய் பொலிஸார் அவரை நாடு கடத்தியபோதும், கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து வெளியே செல்லாது () பகுதியிலிருந்து மாலைதீவு நோக்கு தப்பித்துச் செல்வதற்கான ஏற்பாடுகளுடன் கஞ்சிப்பானை வந்திறங்கியபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பின் பிரிவினர் இணைந்து அவரிடம் தற்சமயம் விசாரணை செய்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
டுபாயில் கைது செய்யப்பட்டோரில் விசாரணைகளின் பின்னர் அந்நாட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட முடியாதவர்களை டுபாய் பொலிஸ் நாடு கடத்தி வருகின்றது. அதன் பிரகாரம் நேற்று பிரபல பாடகர் ஒருவரின் மகன் மற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் நாடு கடத்தப்பட்டனர். அவர்களை கைது செய்து விசாரித்த சீஐடியினர் நதிமால் பெரேராவின் மகனை விடுதலை செய்ததுடன் சிறைச்சாலை அதிகாரியை மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்துள்ளனர். அவர் சிறைச்சாலையில் பாதாளங்களுடன் தொடர்பு வைத்திருந்ததற்கும் உதவி புரிந்ததற்குமான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
0 comments :
Post a Comment