இயக்கச்சி , மாத்தறை, மன்னார், ஜாஎல, கட்டுநாயக்க விமான நிலையம் போன்ற இடங்களில் பலர் கைது
யாழ்ப்பாணம் – இயக்கச்சி மற்றும் உடுத்துறை ஆகிய பகுதிக்கிடையில் 10 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இரண்டு பேர் கைதாகியுள்ளார்கள்.
குறித்த சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளில் 5 பொதிகளில் கேரளா கஞ்சாவை கொண்டு சென்ற சந்தர்ப்பத்திலேயே கடற்படையினர் மற்றும் பொலீஸாரினால் கைதுசெய்யப்பட்டனர். இதேபோன்று மாத்தறை – வல்கம இராணுவத்தினரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 430 கிராம் கேரளா கஞ்சாவுடன் 38 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் மன்னார் பகுதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 168 போதை வில்லைகளுடன் 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துளார்கள்.
இதனிடையே ஜாஎல பகுதியில் போலி இறப்பர் முத்திரிரை மற்றும் போலி ஆவணங்களை தயாரிப்பதற்கான பொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சட்ட விரோதமான முறையில் தங்க பிஸ்கட்களை எடுத்து வர முற்பட்ட இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, புதுக்கடை பகுதியை சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே நேற்று அதிகாலை 1.30 மணியளவில் சென்னையில் இருந்து வந்த நிலையில் கைதாகினர்.
அவரிடம் இருந்து 30 மில்லியன் ரூபா பெறுமதியான 4 கிலோ நிறையுடைய தங்க பிஸ்கட்கள் 40 கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment