இலங்கையை ஒருபோதும் சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டு செல்ல முடியாது. ரணிலுக்கு நன்றி தெரிவிக்கின்றார் மஹிந்த
இலங்கைப் படையினரை சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டு செல்வோம் என தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்கு தெரிவித்து வாக்குகளை கொள்ளையடிக்கின்றனர். மறுபுறத்தில் சிங்கள அரசியல்வாதிகள் ஐயோ எமது படையினரை சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டு செல்லப்போகின்றார்கள் என சிங்கள மக்களில் வாக்குகளை சூறையாடுகின்றனர்.
இந்நிலையில் இலங்கை படையினரை ஒருபோதும் சர்வதே நீதிமன்றுக்கு கொண்டு செல்ல முடியாது என்றும் 2001 ஆம் ஆண்டு பிரதமராக ரணில் விக்ரமசிங்க இருந்தபோது ரோம் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமையே இதற்கான காரணம் என்றும் தெரிவித்துள்ளார் பாரளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க. அத்துடன் அவ்வாறு இந்நாட்டின் படையினர் காப்பாற்றப்பட்டமைக்கான கௌரவம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சென்றடையவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் 11 ஆம் நாளான நேற்று கலந்து கொண்டு பாரளுமன்றில் உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததுடன் ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு தேசிய பொறிமுறையொன்றை அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதன் போது பரந்த பின்புலத்திற்குள் அதனை செயல்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
வெளிவிவகாரங்கள், சுற்றுலா அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் ஆகி அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் நேற்று விவாதம் இடம்பெற்றது.
இந்த முறை ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அரசாங்கம் முன்வைத்த ஒன்றிணைந்த அறிக்கை தொடர்பிலும் அவர் தமது நன்றியை தெரிவித்தார்.
0 comments :
Post a Comment