இந்த அரசாங்கத்தின் வரிகள், எனது எதிர்காலத்தை விட இரண்டு மடங்கு அதிகம் - மஹிந்த ராஜபக்ச
தற்போதைய அரசாங்கம் மக்கள் மீது சுமத்தி வரும் வரிகள், தமது எதிர்காலத்தை விட இரண்டு மடங்கு அதிகம் என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தெஹியோவிட்ட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, இதனை குறிப்பிட்டார்.
இந்த அரசாங்கத்தின் நான்கு வருட ஆட்சிக் காலத்தில், நாட்டு மக்களுக்கான பயனுள்ள உதவிகள், வேலைத்திட்டங்கள் என்பன இதுவரை முன்னெடுக்கப்படவில்லை.
இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துடன் பொருளாதாரம் வீழ்ச்சி பாதையில் பயணிக்கின்றது. .
இந்த நிலையில், அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்து, சரியான முறையில் அணுகி, மக்களை காப்பாற்ற அடுத்து நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர் அர்ப்பணித்து செயல்பட வேண்டும்.
அதற்கு, எமது தரப்பில் இருந்து, பலம் பொருந்திய வேட்பாளர் ஒருவரே முன்னிறுத்தப்பட்டுவார் என, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment