பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படவில்லை. ஆனாலும் நாங்கள் எலும்புத்துண்டு சூப்புகின்றோம். விஜயகலா.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் பலரின் தேவைகள், இதுவரையிலும் சம்பந்தப்பட்ட தரப்பினரால் நிறைவேற்றப்படவில்லை என, கல்வி இராஜாங்க அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இந்த ஆண்டுக்கான பாதீடு குறித்த குழுநிலை விவாத்தில் கலந்து கொண்டு பேசியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்:
தமிழ் மக்களின் பிரச்சினைகள் எதையும் தீர்த்து வைக்காத அரசாங்கத்தில், அமைச்சு பதவி என்ற எலும்புத் துண்டை சூப்பியவாறே மண்ணெண்ணை மகேஸ்வரனின் மனைவி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்ளுக்கு வழங்கப்படும் சகல வரபிரசாதங்களையும் அனுபவித்து வருகின்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment