அலரி மாளிகையில் ஒழித்துகொள்வதற்கு ஓடிய கள்வனை தடுத்து நிறுத்தியது ரயில் கடவை. அனுர குமார
இந்நாட்டில் ஜனாதிபதி மற்றும் அமைச்சுப் பதவிகள் என்பது கொள்ளை அடிப்பதற்கான அனுபதிப்பத்திரம் என்று தெரிவித்துள்ளார் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க.
பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் இந்நாட்டில் கள்வர்கள் ஒழிந்து கொள்ளும் இடமாக பிரதமர் காரியாலயம் செயற்பட்டுவருதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், பிணைமுறி மோசடியில் ஈடுபட்ட பேப்பர்சுவல் ரெசெறீஸ் நிறுவனத்தின் சக நிறுவனமாக இயங்கிய நிறுவனம் ஒன்றின் நிறைவேற்று அதிகாரிகாக செயற்பட்டவர் ரஞ்சன் குலுகல்ல. பிணைமுறி விவகாரத்தில் சிக்கிய அவரை சீஐடி யினர் கைது செய்து நீதிமன்றில் நிறுத்தினர். நீதிமன்று அவரது கடவுச் சீட்டை பறிமுதல் செய்து பிணையில் விடுதலை செய்தது.
பிணையில் விடுதலை செய்யப்பட்ட கள்ளனான ரஞ்சன் குலுகல்லவை இந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க லேக்ஹவுஸ் நிறுவனத்தின் பிரதான இயக்குனர்களில் ஒருவராக நியமித்தார்.
நேற்று சீஐடி யினர் அவரை லேக்ஹவுஸ்க்கு கைது செய்யச் சென்றபோது, அந்த கள்ளன் தனது பென்ஸ் ரக வாகனத்தை எடுத்துச் கொண்டு எங்கே ஓடினான் தெரியுமா? அலரிமாளிகைக்கு. இன்று கள்வர்கள் ஒழிந்து கொள்ளுகின்ற இடமாகவே பிரதமர் காரியாலயம் மாறியுள்ளது.
இவ்வாறு அவன் ஒடுகின்றபோது கொம்பனிவீதி புகையிரத கடவை மூடப்பட்டு விட்டது. அதனால் அந்தக்கள்ளன் அவ்விடத்தில் தடுக்கப்பட்டான் சீஐடி யினர் அவனை அந்த இடத்திலேயே கைது செய்தனர். இல்லையேல் அவன் அலரிமாளிகையினுள் நுழைந்திருப்பான்.
எனவே கள்வர்களை காப்பாற்றுகின்றவர்களை விடுத்து மக்களுக்கு இன்றிருக்கின்ற ஒரே ஒரு தீர்வு மக்கள் விடுதலை முன்னணியாகும் என்றார் அனுரகுமார திஸாநாயக்க.
0 comments :
Post a Comment