Wednesday, March 20, 2019

தேர்தல் முறை முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது - எதிர்க்கட்சித் தலைவர்

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தினால் தனது ஆட்சிக்காலத்தை விட இரு மடங்கு வரிச் சுமை சுமத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தெஹியோவிட்ட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோது அவர் மேற்படி தெரிவித்தார். நடப்பு அரசாங்கத்தினால் சுமத்தப்பட்டுள்ள வரிச்சுமையானது, எனது காலத்தையும் விட இரண்டு மடங்காகும். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 4 வருடங்கள் கடந்த போதிலும், நாட்டு மக்களுக்கு இதுவரை எதனையும் செய்யவில்லை.

இந்த அரசாங்கம் பழிவாங்கும் செயற்பாடுகளையே அடிப்படையாக கொண்டு செயற்பட்டு வருகின்றது. வாழ்க்கை செலவு நாளாந்தம் அதிகரிக்கின்றது. பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை வரலாற்றில் இவ்வாறு கடன் பெற்றதில்லை. இந்த அரசாங்கம் அதிகூடுதலான கடனை பெற்றுள்ளது.

அத்தோடு தேர்தல் முறை முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர், வெற்றிபெறும் வேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவோம். அந்த வேட்பாளரை வெற்றிபெறச் செய்யும் பொறுப்பை நீங்கள் ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment