யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசாங்கம் இழப்பீடுகளை வழங்க வேண்டும் - பாகிஸ்தான் வலியுறுத்தல்
முப்பது வருடகாலமாக இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தால், பல்லாயிரக்கணக்காக மக்கள் கொன்று குவிக்கப்பட்டதுடன், ஏராளமானவர்கள் அங்கவீனமடைந்தனர்.
அத்துடன் இன்னும் பலர் தமது உறவுகளை தொலைத்ததுடன், காணி, சொத்து உள்ளிட்டவற்றையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தகுந்த முறையில் இலங்கை அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும் என, பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் இடம்பெற்று வரும் நிலையில், இலங்கை குறித்து இன்று தமது உத்தியோகப்பூர்வ அறிக்கையை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பாச்லெட் சபையில் சர்வதேச நாடுகள் குழுமியிருக்க சமர்ப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் பேரவையின் உறுப்பு நாடுகள், குறித்த அறிக்கை தொடர்பில்தமது நிலைப்பாடுகளை முன்வைத்த போதே, பாகிஸ்தான் பிரதிநிதி மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்திற்கு பின்னர் இலங்கை பல காத்திரமான முன்னெடுப்புக்களை மேற்கொள்வதை அவதானிக்க முடிக்கின்றது.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்திற்கு பின்னர் வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரால் பொறுப்பேற்றக்கப்பட்ட பொதுமக்களின் காணிகள் உரியவர்களுக்கே மீண்டும் விடுவிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.
எனினும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பல பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படாதுள்ளன. அவை குறித்து ஆராய்ந்து தீர்வு பெற்றுக் கொடுப்பது முக்கியமானது என, பாகிஸ்தான் பிரதிநிதி கூறினார்.
0 comments :
Post a Comment