Sunday, March 24, 2019

நாங்கள் மாத்திரமல்ல புலிகளும் இலங்கை அரசிற்கு காட்டிக்- கொடுத்தவர்கள்தான். சிறிகாந்தா குற்ற ஒப்புதல் வாக்குமூலம்.

புலிகளின் தலைவர் பிரபாகரனால் சுட்டுக்கொல்லப்பட்ட யாழ் மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா அவர்களின் நினைவாக அமையப்பெற்றுள்ள விளையாட்டரங்கின் பெயரினை மாற்றுவதற்கான பிரேரணை ஒன்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ யாழ் மா நாகர சபையில் கொண்டு வந்துள்ளது.

இப்பிரேரணைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள்ளேயே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில், இவ்விடயம் சரியா தவறா என டாண் தொலைக்காட்சியில் விவாத நிகழ்வு ஒன்று இடம்பெற்றபோது, துரையப்பாவை துரோகி என சித்தரிக்க முற்பட்ட ரெலோ வின் செயலாளர் நாயகம் சிறிகாந்தாவை, விவாதத்தில் கலந்து கொண்டிருந்த யாழ் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பொன் பாலசுந்தரம் அவர்களும் முத்த ஊடகவியலாளர் பரமேஸ்வரனும் மூக்குடைத்து அனுப்பியுள்ளனர்.

துரையப்பா துரோகி என சிறிகாந்தா அர்த்தம் கற்பிக்க முற்பட்டபோது, ரெலோ என்ற அமைப்பு சிறிலங்கா அரசுடன் இணைந்து மேற்கொண்ட கைங்கரியங்களை அவர்கள் கேள்விகளாக தொடுத்தனர். அக்கேள்விகளுக்கு பதிலளிக்கமுடியாத சிறிகாந்தா, தாங்கள் மாத்திரம் இலங்கை அரசுடன் இணைந்து செயற்படவில்லை என்றும் புலிகளும் பிறேமதாஸ அரசுடன் இணைந்து மாற்று இயக்கத்தினரை காட்டிக்கொடுத்தனர் என குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

இவ்விவாதங்களின்போது மூன்று தடவைகளில் பொன் பாலசுந்தரம்பிள்ளை அவர்கள், சிறிகாந்தாவை பகுத்தறிவுடன் கருத்துக்களை முன்வைக்குமாறும் தமிழ் தலைமைகள் மக்களை உணர்சியூட்டியதன் விளைவினை நாம் அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம் என்றும் எச்சரித்தபோது, சிறிகாந்தாவில் இரு கைகளும் உதடுகளும் நடுங்க வாயடைத்துக்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

பொன் பாலசுத்தரம்பிள்ளை அவர்களின் கருத்துக்கு வலுச்சேர்க்குமுகமாக கருத்துரைத்த ஊடகவியலாளர் பரமேஸ்வரன், தமிழ் தலைமைகளின் உணர்சி ஊட்டும் பேச்சுக்களால் உந்தப்பட்டு இயக்கங்களில் இணைந்த இளைஞர்களில் தானும் ஒருவன் என தெரிவித்தார்.

தமிழ் தலைமைகளின் உணர்ச்சிப் பேச்சுக்களாலேயே தமிழ் இளைஞர்கள் தமது வாழ்வினை தொலைத்தனர் என்ற உண்மையை எவ்வித கிலேசமும் இன்றி மறுத்துரைத்த சிறிகாந்தா, இளைஞர்கள் தமது தலைவர்களின் பேச்சுக்களால் இயக்கங்களில் இணையவில்லை என்றார்.


தமிழ் தலைவர்கள் மாத்திரம் அல்ல அவர்களின் மனைவியரும் தமிழ் இளைஞர்கள் உணர்சியூட்டினர் என்ற விடயத்தை இலங்கைநெட் சிறிகாந்தாவிற்கு நினைவூட்டுகின்றது. புலிகளால் படுகொலை செய்யப்பட்ட அமிர்தலிங்கம் அவர்களின் மனைவி மங்கையற்கரசி „ சிங்களவனின் தோலை கொண்டுவாருங்கள், செருப்பு தைத்து போடப்போகின்றேன்' என பகிரங்க மேடைகளில் இளைஞர்களை உசுப்பேற்றினார்.

இறுதியாக பிரித்தானியாவில் தஞ்சம் அடைந்த திருமதி. மங்கையற்கரசி அமிர்தலிங்கம் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திறங்கி நேரே ஒரு சிங்கள பொலிஸாரின் வீடு தேடிச் சென்ற வரலாறு பதிவாகியுள்ளது. அதாவது யாருடையை தோலை தனது காலுக்கு செருப்பாக்க வேண்டும் என்று கூறினாரோ அவரது காலடி தேடிச் சென்றார். எனவே சிறிகாந்தா வரலாற்றை மறந்திருக்கலாம் ஆனால் மக்கள் அவற்றை மறந்ததாக இல்லை.

சுயேட்சையாக தேர்தலை எதிர்கொண்டு தமிழ் தேசியத்தை தோக்கடித்து தமிழ் மக்களின் வாக்குகளை பெற்ற மாபெரும் தலைவனை சிறிகாந்தா துரோகி என்கின்றார். ஆனால் தமிழ் மக்கள் சிறிகாந்தாவை இன்றும் துரோகியாகவே பார்கின்றனர். யாழ்பாணத்தில் அத்தனை குற்றவாளிகளையும் , போதைப்பொருள் காரர்களையும் காப்பாற்றி வரும் சிறிகாந்தா இதுவரை 10 மேற்பட்ட தேர்தல்களில் நின்றபோதும், ஒருமுறைகூட மக்கள் தெரிந்தெடுக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com