Saturday, March 16, 2019

சர்வதேசத்திடம் வாக்குறுதி கொடுத்த மஹிந்த இப்போது சத்தம் இல்லாமல் இருக்கின்றார் - ஐ தே க குற்றச்சாட்டு

ஐ நாவின் மனித உரிமைகள் கூட்டத்தொடரின் 40 ஆவது ஜெனீவா அமர்வுகள் ஆரம்பமாகி பல நாட்கள் கடந்து விட்டன. இலங்கை அரசாங்கத்தின் யுத்த குற்ற மீறல்கள், பொறுப்பு கூறாமை தொடர்பில் ஜெனீவா அமர்வில் அங்கத்துவம் பெற்ற பல நாடுகள் இலங்கை மீது கடும்போக்கை கையாண்டு வருகின்றன. இதற்கு தற்போதைய எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸ்வே முழு காரணம் என, ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

முன்னர், இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின்போது யுத்த விதிமுறை மீறல்களுக்கான பதிலை வழங்குவதாக, சர்வதேசத்திடம் வாக்குறுதி அளித்த மஹிந்த ராஜபக்ச இன்று, அதிலிருந்து விலக்குவதற்கான பேச்சுக்களை ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலைப்பாடானது , சர்வதேச நாடுகளிடையில் பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது என, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் குறிப்பிட்டார். அத்துடன், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸ அண்மையில், சர்வதேச நாடுகள் இலங்கையின் உள்ளக பிரச்சினைகளில் தலையீடு செய்ய அனுமதிக்க வேண்டாம் என்ற கருத்தை வெளியிட்டு இருந்தார்.

ஆனால் சர்வதேசம் தலையீடு செய்வதற்கு யார் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தது? முழு பிழைகளையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு, தப்பிக்க நினைக்கும் மஹிந்த ராஜபக்ஸவால், இலங்கைக்கு மிகப்பெரிய சவால் ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் துஷார மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment