பொறுத்தது போதுமாம் மே க்கு பின்னர் பொங்கி எழப் போகின்றார்களாம் ஜேவிபி.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் விடயத்தில் எதிர்வரும் காலத்தில் விட்டுக்கொடுப்புக்களுக்கு இடமில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் , இந்நாள் ஜனாதிபதி யாவரும் இரு தடவைகளுக்கு மேல் தமது ஆட்சிக்காலத்தினுள் நிறைவேற்று அதிகார முறையை ஒழிப்போம் என்று உறுதிமொழி அளித்தவர்கள். ஆனால் அவர்கள் அதை நிறைவேற்ற வில்லை.
மக்கள் விடுதலை முன்னணி 20 அரசியல் யாப்பு சீர்திருத்த முன்மொழிவை கொண்டுவந்திருக்கின்றது. இது விடயத்தில் மக்களின் ஆணையை பெறும்பொருட்டு சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும் என உச்ச நீதிமன்று தீர்ப்பளித்துள்ளது. அதேநேரம் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை தேவைப்படுகின்றது.
அந்த மூன்றில் இரண்டை பெற்றுக்கொள்வற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான விவாதத்தினை மார்ச் மாதத்தில் நிகழ்த்துவதற்கு பாராளுமன்றின் நிகழ்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் நாம் தோல்வி காண்போமாக இருந்தால், மக்கள் விடுதலை முன்னணி மக்களுடன் இணைந்து ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை தனியாக நிறுத்தும் என ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment