பிணை முறி விவகாரம் குறித்து ஜனாதிபதி விசேட பணிப்புரை
மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிண முறி மோசடிகள் குறித்த விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், அது குறித்த அறிக்கையை, தமக்கு விரைவாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பிணமுறி விவகாரம் குறித்த தடயவியல் கணக்காய்வு அறிக்கைகளை பெற்று அது குறித்த விசாரணைகளை மேலும் துரிதப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் இது குறித்த விசாரணைகளுக்காக சர்வதேச நிறுவனம் ஒன்றும் இலங்கை அரசாங்கத்தின் விசாரணைகளுக்கு உதவியளிக்கவுள்ளதாக தெரியவருகின்றது. எனவே இது குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் நீதியான விசாரணை அறிக்கையை விரைவில் கையளிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
இந்த விசாரணைகளுக்கு மத்திய வங்கியும் தமது ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment