போதைப்பொருளை ஒழிக்க பாடுபடும் ஜனாதிபதி, தனது மகளுக்கு மதுபான சாலைக்கான உரிமத்தை வழங்கியுள்ளார்.
இலங்கையில் தொடரும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார்.
எனினும் அவரால் போதைப்பொருளை முற்றாக ஒழிக்க முடியவில்லை என, ஐக்கிய தேசிய கட்சியை அங்கத்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2019 ஆம் ஆண்டு பாதீட்டுக்கான ஜனாதிபதி மற்றும் பிரதமருக்குரிய நிதி ஒதுக்கீடுகள் குறித்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே, அவர் இதனை குறிப்பிட்டார்.
இலங்கையில் போதைப்பொருளை ஒழிக்கப்போவதாக குறிப்பிடும் ஜனாதிபதி, தனது மகளுக்கு வழங்கியுள்ள மதுபான சாலைக்கான உரிமத்தை முதலில் இரத்து செய்ய வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரபச்சந்திரன் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment