நுரைச்சோலை அனல் மின் நிலையத்தாலேயே இன்று மக்கள் வெளிச்சத்தில் உள்ளனர். பந்துல
மஹிந்த ராஜபக்ச நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை உருவாக்கியிராவிட்டால் நாடு இன்று இருளில் இருந்திருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துள குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இன்று நாட்டுக்கு போதிய மின்சாரத்தை வழங்க முடியாதுள்ளது. இவர்கள் முன்னறிவித்தல் இன்றி மின்சாரத்தை வெட்டுகின்றார்கள். சமைத்துக்கொண்டிருக்கின்றவர்கள் இடையில் நிறுத்திவிட்டு தலையில் கையை வைத்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்திடம் இது தொடர்பில் தெளிவான திட்டம் ஒன்று இல்லை. இவ்விடத்தில் ஒன்றை நினைவு கூர விரும்புகின்றேன். கரு ஜெயசூரிய கொழும்பு மாநாகர சபைக்காக போட்டியிட்டபோது, கரு வந்தால் வெளிச்சம் வரும் என்ற சுலோகத்தை தேர்தலுக்கு பயன்படுத்தினார்கள். இறுதியில் வெளிச்சத்திற்கு பதிலாக இருள்தான் மிஞ்சியது. அதனால் மக்கள் அவரை கரு ஜெயசூரிய என்பதற்கு பதிலாக கருவல ஜெயசூரிய என்றார்கள் (கருவல ஜெயசூரிய என்றால் தமிழில் இருள் ஜெயசூரிய)
0 comments :
Post a Comment