ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு செயற்றிட்டத்தில் பாரிய நிதி மோசடிக்கான அபாயம்
ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவிலவில் மேற்கொள்ளப்படவுள்ள USD 3.85 பில்லியன் பெறுமதியான சர்ச்சைக்குரிய எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டத்தில் பாரிய நிதி மோசடி இடம்பெறுவதற்கான அபாயம் உள்ளதாக ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் நிறுவனம் நம்புகிறது.
இது ‘நிதி செயற்பாட்டு செயலணி (Financial Action Task Force (FATF) இனால் கணிக்கப்பட்ட நிதிச்சபை (Money Laundering) மற்றும் பயங்கரவாத்திற்கான நிதியுதவி செய்யும் சாத்தியமுள்ள நாடுகளின் பட்டியலிலிருந்து இலங்கை தமது பெயரை நீக்குவதற்காக மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
குறித்த செயற்றிட்டத்தின் பிரதான முதலீட்டாளர் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட இன்வெஸ்ட்மெண்ட் வெகிக்கிள் சில்வர்பார்க் இன்டர்நெஷனல் லிமிடெட் எனும் தமிழ் நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும் முன்னாள் இந்தியன் யூனியன் அமைச்சருமான டாக்டர் எஸ்.ஜெகரஷகன் என்பரின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு கம்பனியாகும். இவரது வியாபார முதலீடுகளில் உள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே பலமுள்ள இந்திய அதிகாரசபைகளாலும் ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன.
FATF இனால் பண மோசடி எதிர்கொள்வதற்கான சர்வதேச நியமங்களுடனான 40 பரிந்துரைகளைக் கூறுகிறது. இதில் 12 பரிந்துரைகள் அரசியல் ரீதியாக பலம் வாய்ந்த நபர்களினால் மேற்கொள்ளப்படும் நிதிபரிமாற்றங்கள் தொடர்பாக நியாயமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டியதன் அவசியத்தை காட்டுகிறது.
TISL நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக்க ஒபேசேக்கர கூறுகையில் இலங்கை FATF இன் பட்டியலிலிருந்து அகற்றுவதற்கு மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுடன் முதலீட்டுச் சபையானது சில்வர் பார்க் இன்டர்நெஷனல் இன் முதலீடுபற்றிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியதுடன் அரசியல் ரீதியான பலம்வாய்ந்த நபர் என்பதன் பொருள் விளக்கத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.
செயற்திட்டத்தில் ஈடுபடவுள்ள திறத்தவர்கள் பற்ற pஉள்ள குழப்பமான நிலையினை கருத்தில் கொண்டு TISL அரச அதிகாரசபைகளிடம் தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் கீழ் தாமாக முன்வந்து தகவல் வழங்குமாறு கோருகிறது. தகவல் உரிமை சட்டத்தின் பிரிவு 9ன் பிரகாரம் குறித்த அமைச்சர் நடைமுறைப்படுத்தும் செயற்றிட்டம் பற்றிய விபரங்களை திட்டம் ஆரம்பிப்பதற்கு 3 மாதங்களுக்கு முன்பே பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும்.
ஒபேசேக்கர மேலும் தெரிவிக்கையில், பொதுத்தளத்தில் பகிரங்கமாக தகவல் வெளியிட வேண்டியதன் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட முடியாது> விசேடமாக பாரிய வெளிநாட்டு முதலீடுகள் மேற்கொள்ளும் போது உள்ளுர் பொருளாதாரத்திற்கு நேரடி தாக்கத்தை கொண்டுவரும் என்பதால் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றை உறுதிப்படுத்துவதனூடாக நன்நோக்குடன் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு முதலீடுகளை கவருவதாக அமையும் எனவும் கூறினார்.
0 comments :
Post a Comment