சுமந்திரனை கொல்ல சதி சுவிஸிலிருந்தே மேற்கொள்ளப்பட்டது. யார் அந்த இருவர்?
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சர்வ சக்தி சுமந்திரனை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தது. மிகவும் நுணுக்கமாக திட்டமிடப்பட்டிருந்த அந்த திட்டம் பிசகிப்போனது ஒரு எதிர்பாராத நிகழ்வு.
இவ்விடயம் தொடர்பாக சில ஊடகங்கள் சில விடயங்களை தொட்டுச் சென்றுள்ளன. அச்செய்திகள் சிலவற்றில் வழமைபோல் சில உண்மைகளும் சில கற்பனைகளும் காணப்பட்டது. தற்போதுவரைக்கும் தரக்கூடிய சில தகவல்களை இலங்கைநெட் இங்கே தருகின்றது.
புளியம்குளம் பிரதேசத்தில் ஒருவர் வெடிபொருட்கள் சிலவற்றுடன் சென்றபோது ஏதேச்சையாக மாட்டினார். ஆனாலும் பொருட்களை போட்டுவிட்டு தப்பிவிட்டார். பொலிஸார் அவ்விடத்தில் கோட்டையை விட்டுவிட்டு இலங்கை பொலிஸாருக்கே உரித்தான பாணியில் கையை பிசையத் தொடங்கினர்.
ஆளை விட்டுவிட்டு மேற்கொள்ளப்பட்ட போஸ்ட்மோட்டத்தின்போது, புளியம்குளம் பிரதேசத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் கைது செய்யப்பட்டார். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் புளியம்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைத்து கார்த்திக்கிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சில தகவல்கள் வெளியானது.
வெடிபொருட்களை விட்டு விட்டு தப்பிச் சென்ற நபர் ஆனந்தராசா என்ற பெயருடையவர். அவர் வெளிநாடு ஒன்றிலிருந்து இந்தியாவிற்கு வந்து அங்கிருந்து படகு ஒன்றில் இலங்கைக்கு வந்துள்ளார். இங்கு வந்த அவர் சில வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை சேகரிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அவ்விடயம் குருட்டு வாக்கில் மாட்டியுள்ளது. அத்துடன் அவர் வந்தவழியால் இந்தியாவிற்கே தப்பித்து விட்டார் என்பது மாத்திரம் தற்போதைக்கு வெளியிடமுடியும்.
ஆனந்தராசா இலங்கையில் நின்ற காலத்தில் சிலருடன் தொலைபேசியில் மாத்திரம் உரையாடியுள்ளார். அத்துடன் தாக்குதலுக்காக சிலரையும் தேர்ந்தெடுத்துள்ளார். அவர்கள் எவருக்கும் இலக்கு யார் என்பது தெரியப்படுத்தப்படவில்லை.
இந்த ஒருங்கிணைப்புக்கு சுவிட்சர்லாந்திலிருந்து இருவர் சம்பந்தப்பட்டுள்ளனர். அவர்கள் யார் என்பது எதிர்வரும்காலங்களில் அம்பலமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புளியம்குளத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கார்த்திக்கின் தகவல்களின் பிரகாரம் சுமந்திரன் ஒரு இலக்கு என்பது வெளியாகியுள்ளது. அடுத்த இலக்கு புலிகளின் நிழல் தலவைன் நானே என்று வெடிவிட்டுக்கொண்டிருப்பவர் என்பது அதிர்ச்சியான தகவல்.
இலங்கையில் ஏதாவது தாக்குதல் ஒன்றை நாடாத்திவிட்டால் புலம்பெயர் தேசத்தில் தமது பைகளை நிறைக்கலாம் என புலம்பெயர் பினாமிகள் பலர் பல்வேறு முயற்சிகளை பத்து வருடங்களாக மேற்கொண்டுவருகின்றனர். ஆனாலும் இன்றுவரை நாட்டிலுள்ள முன்னால் புலிகள் தகடு கொடுத்தே வருகின்றனர். செய்யலாம் செய்யலாம் என்றே தங்களது கணக்குக்கு பணத்தை வரவழைத்துக்கொள்ளும் அவர்கள் தமது கணக்கு நிறைந்தவுடன் காதோடு காதை வைத்தாற்போல் கதையை போட வேண்டிய இடத்திற்கு போட்டு விடுகின்றனர். இதுவரைக்கும் இவ்வாறு பல ஒப்பறேசன்கள் காதிலை பூ கந்தசாமியாக மாறியுள்ளமை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகவே உள்ளது.
இங்குள்ள முன்னாள் புலி உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டோரிடம் பணத்தை பெற்றுக்கொண்டாலும், தாக்குதலை நடாத்திவிட்டு உள்ளே போவதற்கு தயாராக இல்லை. இந்த நிலையிலேயே தெற்கிலுள்ள பாதாளங்களை நாடியுள்ளனர். அவர்கள் அதற்காக பணத்துடன் 9 எம்எம் ஐ யே விரும்புகின்றார்களாம். அவ்வாறு 9 எம்எம் களை பெற்றுக்கொண்டவர்கள் அத்துடன் டாட்டா காட்டியும் இருக்கின்றார்கள்.
இவ்வாறு டாட்டா காட்டிய பாதாளங்கள் தொடர்பான விபரங்களுடன் எதிர்வரும் நாட்களில் சந்திப்போம்......
0 comments :
Post a Comment