அரசியல் அமைப்பு பேரவை தொடர்பில் ஜனாதிபதி அநீதியான கருத்துக்களை முன்வைத்துள்ளார் - அரசியலமைப்புப் பேரவை
அரசியலமைப்புப் பேரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது, அரசியலமைப்புப் பேரவையின் நடவடிக்கை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தின்போது, அரசியலமைப்புப் பேரவையில் காணப்படும் பிரச்சினைகளை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதியால் அரசியல் அமைப்பு பேரவை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையிலேயே குறித்த கடிதம் அமையப்பெற்றுள்ளது. குறித்த கடிதம் சபாநாயகர் கரு ஜயசூரியவை தலைமையாக கொண்டு எழுதப்பட்டது. அதன் சுருக்கம் ஊடகங்களிடம் அனுப்பி வைக்கப்பட்டது.
அரசியல் அமைப்பு பேரவை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த கருத்துக்கள் மிகவும் அநீதி என்பதுடன், மிகவும் பாரதூரமானது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசியலமைப்புப் பேரவையில் சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு பெரும்பான்மை வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் தாமும் இணங்குவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பு பேரவை, அரசியல் அமைப்பிற்கு அமையவே உயர் நீதிமன்ற நீதியரசர்களை நியமித்தல், சட்டமாஅதிபர், பொலிஸ்மாஅதிபர் ஆகியோரை நியமித்தல் போன்ற பணிகளை செய்து வருவதாக
சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் அரசியலமைப்புப் பேரவையின் நடவடிக்கைகள் குறித்து ஏதும் அபிப்பிராயங்கள் தென்படுமாக இருந்தால், குறித்த விடயங்களை பேரவையிடம் முன்வைக்குமாறும் அவற்றை ஜனாதிபதியின் கவனத்திற்கு தயவுடன் கொண்டுவருவதாகவும், பேரவை ஊடகங்களுக்கு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment