தலைமன்னார் கடல் பகுதியில் இருவர் 912kg பீடி சுற்றும் இலைகளுடன் கைது
தலைமன்னார் கடல் பகுதியில் ஒரு தொகை பீடி இலைகளுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் வௌிச்சவீட்டிற்கு, 5 கடல்மைல் தொலைவில் 912 கிலோகிராம் பீடி சுற்றும் இலைகள் குறித்த இருவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் 32 மற்றும் 38 வயதான மன்னார் – பேசாலை பகுதியை சேர்ந்தவர்களை தாம் கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. 27 மூடைகளில் பொதியிடப்பட்டு, டிங்கி படகொன்றில் இவை கொண்டுவரப்பட்டபோதே கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பீடி சுற்றும் இலைகள் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது. இதனையடுத்து, சந்தேகநபர்களையும் கைப்பற்றப்பட்ட பீடி சுற்றும் இலைகளையும் யாழ்ப்பாணம் சுங்கத் திணைக்களத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment