Friday, March 22, 2019

ஊழல் மோசடி பிரிவில் றிசார்ட் க்கு எதிராக முறைப்பாடு. முள்ளிக்குளத்தில் 75 ஏக்கர்

வர்த்தக வாணிப அமைச்சர் றிசார்ட் பதுயுத்தீனது சொத்துவிபரங்கள் தொடர்பாக விசாரணை செய்யுமாறு ஊழல் மோசடி பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வடக்கின் வசந்தம் என்ற அபிவிருத்தி வேலைத்திட்டத்தின்போது அவர் முறையற்ற விதத்தில் பணம் சம்பாதித்துள்ளாரா என்ற விடயத்தை கண்டறியுமாறு முறையிடப்பட்டுள்ளது.

அரச சொத்துக்களை மோசடி செய்தல் என்ற விடயத்தின் கீழே மேற்படி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேநேரம் றிசார்ட் வில்பத்து பிரதேசத்தில் காடுகளை அழித்து இயற்கைக்கு சேதம் ஏற்படுத்தியதாக உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை யாவரும் அறிந்தது.

இவ்வாறான நிலையில் முள்ளிக்குளம் காட்டுப்பகுதியில் வர்த்தக மற்றும் தொழிற்சாலைகள் வலையம் ஒன்றை அமைப்பதற்கு றிசார்ட் 75 ஏக்கர்களை அரசிடம் வேண்டியுள்ளதாக அறிய முடிகின்றது. இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் உள்ளுர் வட்டாரங்களில் அறியகூடியதாகவுள்ளதுடன் இவ்வனுமதிக்கு எதிராக இயற்கையை பாதுகாக்கும் அமைப்புக்கள் பல கண்டனம் வெளியிட்டுள்ளது.

நாட்டில் வர்த்தக வலையத்திற்கு பொருத்தமான இடங்கள் பலவுள்ளபோதும், றிசார் காடுகளினுள் நுழைவது அப்பிரதேசங்களில் குடியேற்றங்களை மேற்கொள்வதற்காக என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment