பலராலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்ட மன்னார் மனித புதைகுழி விவகாரம் குறித்த செய்தியொன்று வெளிவந்துள்ளது. மன்னார் நகர நுழைவாயிலில் புதைக்கப்பட்ட எலும்புக் கூடுகள், சுமார் 300 தொடக்கம் 500 ஆண்டுகள் பழமையானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மனித எலும்பு கூடுகள் குறித்த மாதிரிகளின் கார்பன் அறிக்கைப்படி, 1499 தொடக்கம் 1719 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் புதைக்கப்பட்ட மனித உடலங்களின் எச்சங்களே மன்னாரில் இருந்து மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 335 எலும்புக்கூடுகளில், 6 எலும்பக்கூடுகளின் மாதிரிகள் மாத்திரம் அமெரிக்காவின் புளோரிடாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. கார்பன் அறிக்கையை பெற்று கொள்ளும் நோக்கில் இந்த எலும்பு கூடுகள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த ஆய்வு முடிவுகள் அதிகாரபூர்வமாக மன்னார் நீதிவான் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையிலேயே குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment