20 ஐ நிறைவேற்று அமெரிக்கா அழுத்தமாம்! இராஜாங்க அலுவலக அதிகாரி ஒருவர் களத்தில்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கும் பொருட்டு மக்கள் விடுதலை முன்னணியினாரால் முன்மொழியப்பட்டுள்ள 20 வது அரசியல் யாப்பு திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கான பின்விசையை அமெரிக்கா வழங்குவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிடுகின்றது.
இதன்பொருட்டு நேற்று தாஜ் சமுத்திரா ஹோட்டலிலிருந்து நேரடியாக பாராளுமன்றுக்குச் சென்ற அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் பாராளுமன்ற பொதுச் செயலாளரை சந்தித்து பேசியதாக நம்பகமாக அறிவதாக அவ்விணையம் தெரிவிக்கின்றது.
பொதுச் செயலாளரை அவ்வதிகாரி பிற்பகல் நான்கு மணியளவில் சந்தித்ததாகவும், சந்திப்பு 8 மணிவரை நீடித்ததாகவும் குறிப்பிடும் அச்செய்தி, 20 வது திருத்தச் சட்டத்தை முன்நோக்கி நகர்த்துவது தொடர்பாக சந்திப்பின்போது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றது.
0 comments :
Post a Comment