150 கோடி முஸ்லிம்கள் சார்பாக நியுசிலாந்து பிரதமருக்கு நன்றி தெரிவிக்கின்றார் டுபாய் அரசின் துணைத் தலைவர்.
நியுசிலாந்து பள்ளிவாயல்களில் மேற்கொள்ளப்பட்ட இனவெறித்தாக்குதலின் பின்னர் அந்நாட்டின் பிரதம மந்திரி செயற்பட்ட விதம் தொடர்பாக பாராட்டியுள்ள டுபாய் அரசின் துணைத்தலைவர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தௌம், 1.5 பில்லியன் முஸ்லிம்களின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்வதாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் பிரதமர் வழங்கிய ஆதரவை கௌரவிக்கும் விதமாக டுபாயில் உள்ள மிகப்பெரிய கட்டடமான புர்ஜ் கலீஃபாவில் அவருடைய படம் ஒளிபரப்பப்பட்டது .
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரென்டன் டார்ரன்ட் என்பவர், கடந்த வெள்ளிக்கிழமை, கிறைஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள 2 பள்ளிவாசல்கள்களுக்குள் புகுந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நியூஸிலாந்திலும், வெளிநாடுகளிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மக்கள் வைத்துள்ள தாக்குதல் துப்பாக்கிகள், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் தானியங்கி ரக துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றுக்கு நியூஸிலாந்து அரசு தடை விதித்துள்ளது. மேலும் முஸ்லிம்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை பிரதமர் ஜெசிந்தா தெரிவித்து மக்களையும் சந்தித்திருந்தார்.
இந்நிலையில் அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்னுக்கு சமூக வலைதளத்தின் வாயிலாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அதில் ஒரு ட்விட்டர் கணக்கில், துப்பாக்கியுடன் கூடிய புகைப்படத்தை பதிவிட்டு, 'அடுத்தது நீதான்' என நியூசிலாந்து பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதனை பார்த்த பொதுமக்கள் பலரும் பொலிஸார் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து அந்த கணக்கை இடைநிறுத்தம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து செய்திவெளியிட்டுள்ள NZ Herald ஊடகம், முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களையும் தீவிர வலதுசாரி கருத்துக்களையும் வெள்ளையின வெறிபிடித்த வசனங்களும் அந்த ட்விட்டர் கணக்கில் அடுத்தடுத்து இடம்பெற்றன.
சுமார் இரண்டு நாட்களாக இந்த அச்சுறுத்தல் அந்த கணக்கில் காணப்பட்டதாகவும், பொதுமக்கள் பலரும் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து, கணக்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் ஊடகம் ஒன்றிற்கு கருத்துரைத்த கொலையாளியின் தாயார் அவனுக்கு மரணதண்டனை வழங்குமாறு தெரிவித்துள்ளார்.
பள்ளிவாயலில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு கானொலியை காண்ப்பித்தபோது, அதை தன்னால் பார்க்க முடியாது என்று அழுத அவர், மற்றவர்களின் உயிரை எடுத்த டார்டனுக்கும் அதே தண்டனைதான் பொருத்தமானது என்றார்.
0 comments :
Post a Comment