ஆறே நாட்களில் 1321 பேர் கைது - காவல்துறையினர்
கடந்த ஆறு நாட்களாக காவல்துறை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புக்களின் போது, சுமார் 1321 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை மா அதிபரின் உத்தரவுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் மது போதையில் வாகனம் செலுத்தியமை, போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்தமை, அதிக வேகத்துடன் வாகனத்தை செலுத்தியமை முதலான குற்றச்சாட்டுக்குக்களின் கீழ் கைது செய்யப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே 29 ஆயிரத்து 275 சாரதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment