Wednesday, March 20, 2019

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில், இலங்கைக்கு 130 ஆவது இடம்

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 130 ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் மொத்தமாக 156 நாடுகள் உள்வாங்கப்பட்டுள்ளன.

ஒரு நாட்டில் வாழும் மக்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைத் தரம், ஆயுட்காலம், சமூக ஒத்துழைப்பு மற்றும் இலஞ்ச ஊழல் ஆகிய விடயங்களை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட பட்டியலில்,
முதலாவது இடத்தை பின்லாந்து பெற்றுக் கொண்டுள்ளது. இந்நாடு இப்பட்டியலில் இரண்டாவது தடவையாக முதலிடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்கா இந்தப் பட்டியலில் பின்னடைவை சந்தித்து வருகின்றது. ஆரம்பத்தில் 14 ஆவது இடத்தில் இருந்த அமெரிக்கா, தற்போது 19 ஆவது இடத்திற்கு பின்னோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comments :

Unknown March 21, 2019 at 12:46 PM  

156 நாடுகளில் இலங்கை 130வது இடம்??

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com