Friday, March 15, 2019

மாதத்திற்கு 1 லட்சம் ரூபாவை பிரத்தியேக வகுப்புக்காக பெற்ற விரிவுரையாளர். போட்டுடைக்கும் பிமல் ரத்னாயக்க

இன்று பாராளுமன்றில் இடம்பெற்ற குழு நிலைவிவாதத்தில் கலந்துகொண்டு பேசிய பாராளுமன்ற உறுப்பினர் விமல் ரத்னாயக்க, கடந்த 2 – 3 வருடங்களில் கல்விப் பொது தாராதரப் பரீட்சையில் இலங்கை மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி ஒருவர் பிரத்தியேக வகுப்புக்களினூடாகவே சித்தியடைந்துள்ளதாகவும், அவருக்கு இரசாயனவியலுக்காக பிரத்தியேக வகுப்பினை வழங்கிய பல்கலைக் கழக விரிவுரையாளர் ஒருவர் மாதம் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபா பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வியடத்தை தனக்கு றுகுணு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவர் தெரிவித்தாக கூறிய அவர் தொடர்ந்து பேசுகையில், இலங்கையிலுள்ள நடுதர வர்க்கத்தை சேர்ந்த ஒரு குழந்தைக்கு மாதமொன்றுக்கு 12960 ரூபா பிரத்தியேக வகுப்புக்களுக்காக செலவிடப்படுகின்றது. அனால் இந்த நாட்டிலே வறுமை கோட்டின் கீழ் வாழுகின்ற குடும்பங்களில் 10 வீதமானோரின் மாதாந்த வருமானம் 19000 ரூபாகவுள்ளது.

மேலும் இன்று வைத்திய மற்றும் பொறியில் பீடங்களுக்கு 70 வீதமான மாணவர்கள் நடுத்தர வர்க்கத்தில் இருந்தே செல்கின்றனர். அவர்கள் இன்றுள்ள பிரத்தியேக வகுப்புக்களுக்கு செலவிட்டு அந்த நிலையைய அடைகின்றனர். ஆனால் ஏழை மாணவர்களுக்கு இது ஒரு சவாலாகவுள்ளது.

எனவே நிதி ஒதுக்கீடு செய்யும்போது கல்விக்காக பெருமளவு பணம் ஒதுக்கப்படவேண்டியத்தை சுட்டிக்காட்டுகின்றேன் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com