Saturday, February 23, 2019

மஹிந்த மைத்திரி கூட்டணியில் பசில் இல்லை - பசில் சந்திப்பில் கலந்து கொள்ளாமை தொடர்பில் தன்னால் எதுவும் கூற முடியாது - SB

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜக்ஷவுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற முக்கிய சந்திப்பில், பசில் ராஜபக்ஷ எந்தவித இழுத்தடிப்புக்களையும் மேற்கொள்வதில்லையெனவும், அவர் குறித்த சந்திப்பில் கலந்து கொல்லாமை தொடர்பில் தன்னால் எதுவும் கூற முடியாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

இந்த பேச்சுவார்த்தையில் கட்சித் தலைவர்கள், முக்கிய உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இருப்பினும், இதற்கு விருப்ப இல்லாத சிலரும் கலந்து கொண்டிருக்கலாம். ஆனால், பேச்சுவார்த்தை நல்ல எதிர்பார்ப்புடன் நிறைவு பெற்றது எனவும் எஸ்.பீ. திஸாநாயக்க
மேலும் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பின் பலனாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான புதிய கூட்டணி இன்னும் ஒரு மாத காலத்துக்குள் அமைக்க முடியுமாக இருக்கும் என எஸ்.பீ. திஸாநாயக்க நம்பிக்கை வெளியிட்டார்.

இந்த சந்திப்பில், அடிப்படைக் கொள்கைகள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு மூன்று பிரதான அம்சங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ள நிலையில், ஆறு பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்துள்ளனர்.

அத்துடன், புதிய அரசியல் கூட்டணி, யாப்பு தயாரிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் குறித்த குழு தீர்மானித்து, அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, புதிய கூட்டணியின் பெயர், சின்னம் என்பன தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எட்டவில்லை. அடுத்த கட்டமாக அது குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் எஸ்.பீ. திஸாநாயக்க மேலும் கூறினார்.

No comments:

Post a Comment