ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எதிர்காலத்தில் தாமரை மொட்டுச் சின்னம் என்றாலும் போட்டியிட தயாராக இருப்பதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் அங்கம் வகிக்கும் கூட்டணி, எதிர்காலத்தில் நடைபெறும் எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணைந்து உருவாக்கும் விரிவான கூட்டணியின் கட்சித் தலைவர்கள், மற்றும் பெரும்பான்மை உறுப்பினர்கள் எடுக்கும் தீர்மானத்தின் அடிப்படையில் போட்டியிடும் சின்னம் தீர்மானிக்கப்படும். எவ்வாறாயினும் சின்னமோ, நபரே முக்கியமல்ல. வேலைத்திட்டம் என்பதால், உரிய வேலைத்திட்டத்தின் கீழ் விரிவான கூட்டணி உருவாக்கப்படும் என்றும் கூறினார்.
இதனிடையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இடையில் இன்று விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளதாக டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்வது மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகியன கூட்டிணைவது தொடர்பில் இந்த சந்திப்பில் முக்கிய கவனம் செலுத்தப்படும்.
இது சம்பந்தமாக எதிர்க்கட்சிகள் சில இதற்கு முன்னரும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக டிலான் பெரேரா
கூறினார்.
No comments:
Post a Comment