குற்றங்கள் தொடர்பில் மன்னிப்பு வழங்க வேண்டுமானால், மக்களே தீர்மானிக்க வேண்டும் - மனோ கணேசன்
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர்குற்றங்கள் தொடர்பில் மன்னிப்பு வழங்குவதாயின், பாதிக்கப்பட்ட மக்களே தீர்மானிக்க முடியுமென, அரச கரும மொழிகள், மற்றும் இந்து கலாசார அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பழையதை மறப்போம் மன்னிப்போம் என கூறியதை அடுத்து, பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கருத்து தமிழ் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பாக இன்று கருத்து வெளியிட்ட போதே, அமைச்சர் மனோ கணேசன் இதனை தெரிவித்துள்ளார்.
இனப்படுகொலை என்பது மறக்கக் கூடிய விடயம் அல்ல. வரலாற்றை மறக்காமலிருந்தால் தான், மீண்டும் அவ்வாறான தவறுகள் இடம்பெறாமல் தடுக்க முடியும். ஆனால், மன்னிப்பதா? இல்லையா? என்பதை, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களே முடிவு செய்ய வேண்டும் என, மனோ கணேசன் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment