வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு குறித்த விசாரணைகள், எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி மற்றும் 31 ஆம் திதிகதிகளில் இடம்பெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணை இன்று மேன்முறையீட்டு நீதியரசர் மஹிந்த சமயவர்தன முன்னிலையில், எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பா.டெனீஸ்வரனுக்கு மீண்டும் அந்த பதவியை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அதனை நிறைவேற்றவில்லை.
இந்த நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன், நீதிமன்றத்தை அவமதித்ததாக வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையிலேயே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment