தமிழீழ விடுதலைப் புலிகளே, வீரியமான தற்கொலை தாக்குதலை அறிமுப்பக்கப்படுத்தினர் - பாகிஸ்தான் பிரதமர்
கடந்த சில தினங்களாக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் கடும் மோதல் நிலை நிலவி வருகின்றது. காஷ்மீர் - புல்வாமா தாக்குதலை அடுத்தே, இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்திய விமானி அபிநந்தனை, நாளை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் வைத்து அறிவித்தார்.
செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு முன்னதாகவே, இந்துக்களான விடுதலை புலிகள் வீரியமான தற்கொலை தாக்குதல் முறைமையை பயன்படுத்தி இருக்கின்றார்கள் என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
“தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது. தற்கொலை படை தாக்குதல்கள் மதத்தின் பெயரால் நடப்பது இல்லை. இரட்டை கோபுர தாக்குதலுக்கு முன்பாக, உலக அளவில் தற்கொலை படை தாக்குதலை இலங்கையின் தமிழீழ விடுதலை புலிகளே நடத்தினர்.
இதில் தாக்குதலை நடத்தியவர்கள் அனைவருமே இந்துக்கள். ஆனால் மதத்தின் பெயரால் எந்த தாக்குதலையும் நடத்தவில்லை. மாறாக தங்களது விரக்தி மற்றும் கோபத்தின் விளைவாகவே, தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தினார்கள் என, இம்ரான் கான் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் வரலாற்றில், தற்போதைய பிரதமர் இம்ரான் கானின் பேச்சு, மிக முக்கியமானதாக அவதானிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment