இஸ்ரேலுக்கு சென்ற இலங்கைக் குழு, உரிய ஆவணங்கள் இருந்தும் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது!
யாத்திரை நடவடிக்கைகள் நிமித்தம், இஸ்ரேலுக்கு சென்றிருந்த 18 பேர் அடங்கிய மற்றுமொரு குழுவொன்று இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதேவேளை, 18 பேர் அடங்கிய மற்றுமொரு குழுவொன்று, இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இந்தக் குழுவினர், இஸ்ரேலின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் திருப்பியனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவினர் ஜெரூஸலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, யாத்திரைக்காக சென்றிருந்தாக தெரிய வந்துள்ளது.
குளியாப்பிட்டிய, வென்னப்புவ மற்றும் மீரிகம பகுதிகளைச் சேர்ந்தவர்களே, இவ்வாறு நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
உரிய ஆவணங்கள் இருந்த போதும், குறித்த குழுவினர் இலங்கைக்கு திருப்பியனுப்பட்டமைக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment