நோயாளர் காவுகை வண்டிச் சேவையை விரிவுபடுத்த, நிதி ஒதுக்கீடு
நோயாளர் காவுகை வண்டிச் சேவையை விரிவுபடுத்துவதற்கு, புதிய வரவு - செலவு திட்டத்தில், 2 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். ‘சுவசெரிய' நோயாளர் காவுகை வண்டிச் சேவை, அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் தலைமையில் கண்டியில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். செல்வந்தர்களால் எந்த தொகைக்கும் நோயாளர் வண்டிச் சேவையை பெற்றுக் கொள்ளலாம். ஆனால், குறைந்த வருமானம் பெறுவோரின் நலன் கருதி நோயாளர் காவுகை வண்டிச் சேவையை விரிவுபடுத்த வேண்டிய கடப்பாடு உள்ளது.
இத்தனைக் காலமும் ஒரு வைத்தியசாலையிலிருந்து இன்னொரு வைத்தியசாலைக்கு செல்வதற்கான நோயாளர் காவுகை வண்டிச் சேவை மாத்திரமே இயங்கி வந்தது.
எனினும் 1990 நோயாளர் காவுகை வண்டிச் சேவையின் மூலம் நோயாளி ஒருவரை, அவரது வீட்டிலிருந்து 12 நிமிடங்களுக்குள் வைத்தியசாலையில் அனுமதிக்கும் வகையில் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று, அமைச்சர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment