காவல்துறையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணைகளை, எம்மால் ஒருபோதும் மேற்கொள்ள முடியாது என, சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தாக்குதல் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு, சபாநாயகர் கரு ஜெயசூர்யாவிற்கு உரிய அதிகாரம் உள்ளது என, நாடாளுமன்றில் இன்று பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இந்த கருத்துக்களை அடுத்து பதிலளித்து உரையாற்றுகையிலேயே சபாநாயகர் இதனை குறிப்பிட்டார்.
நாம் இத்தாக்குதல் தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளோம். எமக்கு இவ்விவகாரத்தை நாடாளுமன்றின் ஊடாக விசாரணைக்கு உட்படுத்த எந்தவொரு பிரச்சினையும் கிடையாது.
ஆனால், காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதை எம்மால் விசாரணைக்கு உட்படுத்த முடியாது. இந்த தாக்குதலின் போது கதிரையால் தாக்கப்பட்டு உயிர் சேதமேதும் இடம்பெற்றிருந்தால், இதற்கு சபாநாயகர் என்ற முறையில் என்னால் விசாரணை மேற்கொள்ள முடியாது.
சபாநாயகரின் குறித்த கருத்தை பிரதமரும் ஏற்றுக்கொண்டுள்ளார். நாடாளுமன்றில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக நாம் நாடாளுமன்றில் விசாரணைகளை மேற்கொள்வோம். அதில் எவ்வித பிரச்சினையும் இல்லை.
ஆனால், பொலிஸார் மீது மேற்கொண்ட தாக்குதல் தொடர்பான விசாரணைகளை எம்மால் மேற்கொள்ள முடியாது என, சபாநாயகர் கரு ஜெயசூரிய இதன்போது குறிப்பிட்டார்,.
No comments:
Post a Comment