இலங்கை கிரிக்கட் சபையின் புதிய தலைவர், இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றார்.
இலங்கை கிரிக்கட் சபையின் புதிய தலைவரான ஷம்மி டி சில்வா தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கை கிரிக்கெட் சபை தலைவராக தெரிவு செய்யப்பட்ட ஷம்மி டி சில்வா சற்று முன்னர், தனது கடமைகளை பொறுப்பேற்று கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் இன்று 10.30 க்கு ஆரம்பமானது.
விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன் வைட் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற தேர்தலில், சுமதிபால தரப்பில் போட்டியிட்ட ஷம்மி டி சில்வா வெற்றி பெற்றார்.
இதன்போது ஷம்மி டி சில்வா 27 மேலதிக வாக்குகளுடன் 83 வாக்குகளை பெற்று வெற்றி பெற்று இலங்கை கிரிக்கெட் சபை தலைவராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment