Thursday, February 21, 2019

மனித உரிமைகள் ஆணைக்குழு பாதுகாப்பது, குற்றவாளிகளையா? அல்லது பொது மக்களையா? – ஜனாதிபதி

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பாதுகாப்பது, குற்றவாளிகளையா? அல்லது, பொது மக்களையா? என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வு கூடிய போது, அரசியலமைப்புக் குழு தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

அரசியலமைப்புச் சபை தொடர்பாக கடந்த உரையில் பேசப்பட்ட விடயத்தின் பின்னர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம் தெரிவித்து முன்வைத்த அறிக்கையை அவர் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அத்துடன் அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில், சிறைச்சாலை அதிகாரிகள் கைதிகள் சிலரைத் தாக்கியமைக்கும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

இந்த விடயம் தொடர்பாக அவர்கள் முன்வைத்த கேள்விகள், இலங்கையில் உள்ள மில்லியன் கணக்கான மக்களை பாதுகாக்கவா? அல்லது பாதாள உலக குழுவை பாதுகாக்கவா? என்ற கேள்வி தனக்குள் எழுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனதுரையில் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment