தங்கப் பாளங்கள் மற்றும் தங்க ஆபரணங்களுடன், இலங்கைக்கு வந்த 9 பேர், கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த 9 பேரும், டுபாயில் இருந்து இலங்கைக்கு விமானம் மூலம் சட்டவிரோதமாக வருகை தந்துள்ளனர்.
சுமார் ஒரு கோடியே 63 இலட்சத்து 44 ஆயிரம் ரூபா பெறுமதியுடைய தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க பாளங்களை, குறித்த நபர்கள், தமது பயணப் பொதிகளில் மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளனர்.
இவர்கள், மருதானை, நீர்கொழும்பு, சீதுவ, சிலாபம் மற்றும் கண்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில், சம்பவம் குர்தா மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment